ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையங்களில் அதிகளவில் பணிபுரிவதே சிறைச்சாலை உயிரிழப்புக்கு காரணம் என புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நீதிமன்ற காவலில் உயிரிழந்த ஆகாஷ் டெலிட்சனின் உறவினர்கள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரனி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது சிறைச்சாலை உயிரிழப்புகளுக்கு காவல் நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிவதே காரணம் என தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் உயிரிழந்த ஆகாஷ் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
















