திண்டுக்கல் அருகே, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்டிக் கடத்தும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
நீல மலைக்கோட்டை ஊராட்சி செயலாளர் வீரபாண்டி மற்றும் சிலர், கருப்பணசாமி கோயில் செல்லும் பாதையில் உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டிக் கடத்துவதை வாடிக்கையாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
















