வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ வாதங்களை இருதரப்பும் தாக்கல் செய்ய அறிவுறுத்தி, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
















