ஈரான் போர் குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடனான போர் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென புதின் தன்னிடம் கோரியதாகவும் தெரிவித்தார்.
இந்த உரையாடல் வணிக ரீதியாகவும், வெளிப்படையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது என ட்ரம்ப் தெரிவித்தார். மேலும் உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் புதினிடம் பேசியதாக அவர் கூறினார்.
















