இந்தியப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரான் கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு இந்தியா வழங்கியதாக வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு சொந்தமான IRIS Dena என்ற கப்பல் மார்ச் 4ம் தேதி இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
அந்த கப்பல் குறித்த தகவல்களை இந்தியாதான் இஸ்ரேலுக்கு வழங்கியதாக ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கூறியது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.
அதனை சுட்டிக்காட்டி துருக்கி நாளிதழான யெனி சஃபாக்கும் செய்தி வெளியிட்டது. ஆனால், இதற்கு மத்திய அரசின் PIB Fact Check அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
உபேந்திர திவேதி பேசியதாக வெளியான காட்சி Deepfake வீடியோ எனவும், அதனை பாகிஸ்தான் ஆதரவு சமூக வலைதளக் கணக்குகள் பகிர்ந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
















