பல்லாவரம் அருகே இரட்டைக் கொலை வழக்கில் சிறுவர்கள் உட்பட 10 பேரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் மற்றும் சதீஷ் ஆகிய இருவரை 12 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது.
இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அபினேஷ், புவனேஷ், ஸ்ரீ ஹரி, பிரசாந்த், சரண், விஜய், சூர்யா, ஆகாஷ், தனுஷ் உட்பட 10 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தீபக் உட்பட இருவர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
















