மேற்கு ஆசிய போரில் அழுத்தத்தை அதிகரிக்கும் ஈரான் : அமெரிக்கா - இஸ்ரேலுக்கு நீடிக்கும் சவால் : பின்வாங்குவாரா டிரம்ப்? - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு ஆசிய போரில் அழுத்தத்தை அதிகரிக்கும் ஈரான் : அமெரிக்கா – இஸ்ரேலுக்கு நீடிக்கும் சவால் : பின்வாங்குவாரா டிரம்ப்? – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் குறைந்த செலவிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு போரை தொடர்ந்து வருவதால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவுக்கு அழுத்தம் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் தற்போது 11-வது நாளை கடந்துள்ளது. ஷியா மத குருக்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஈரான், தனது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ‘காமிகாஸ்’ ட்ரோன்கள் இன்னும் குறையவில்லை என்பதை காட்டும் வகையில், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை தொடர்ந்து தாக்கி வருகிறது.

ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) நடத்தி வரும் இந்த தாக்குதல்கள் அதிக துல்லியத்துடன், அடிக்கடி நிகழ்வதை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் கவலைக்குரிய நிலைமையாக பார்க்கின்றனர்.

சுமார் 35 ஆயிரம் டாலர் மதிப்புள்ள குறைந்த செலவிலான ட்ரோன்களை பயன்படுத்தி, பல மில்லியன் டாலர் மதிப்புள்ள எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையை ஈரான் உருவாக்கியுள்ளது.

இதனால் இந்த போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு பொருளாதார ரீதியாகவும் பெரும் அழுத்தம் உருவாகியுள்ளது. இதனால் ஈரான் முன்கூட்டியே பெரும் அளவில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஷாஹெட்-136 போன்ற ட்ரோன்களை குவித்து வைத்திருந்தது என்பதும் இந்த போரில் தெளிவாகியுள்ளது.

தொலை தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படுவதால், இந்த போர் “நேரடி மோதல் இல்லாத போர்” என்ற புதிய போர் முறையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த போரில் மனித உளவுத் தகவல்களின் அடிப்படையில் இலக்குகள் தேர்வு செய்யப்பட்டு, வெகு தூரத்திலிருந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இந்த போர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களை வெளி காட்டுவதோடு, தற்காப்பு ஆயுத உற்பத்தியில் தன்னிறைவு எவ்வளவு முக்கியம் என்பதையும் உலக நாடுகளுக்கு நினைவூட்டியுள்ளது.

அத்துடன் ஈரானுக்கு சர்வதேச தடைகள் இருந்தபோதிலும், சீனா மற்றும் ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களை மாற்றியமைத்து, நீண்ட தூர ஆயுதங்களை அந்நாடு உருவாக்கியிருப்பது இந்த போரில் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை மட்டும் குறிவைக்காமல், சன்னி வளைகுடா நாடுகளையும் இந்த மோதலுக்குள் இழுத்து, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்க ஈரான் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஹார்மஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இத்தகைய அழுத்தம் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பின்வாங்க வேண்டிய நிலை உருவாகும் என்ற கணிப்பும் நிபுணர்களால் முன்வைக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நாகரிகத்தை கொண்ட பாரசீக மரபின் வாரிசாக இருக்கும் ஈரான், 1979 இஸ்லாமியப் புரட்சியிலிருந்து மத அடிப்படையிலான ஆட்சியில் உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக பாலஸ்தீனப் பிரச்னையை மையமாக வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலையை ஈரான் உருவாக்கியுள்ளது.

இதனால், இந்த சூழ்நிலையில் ஈரான் மக்களிடையே அரசுக்கு எதிரான கிளர்ச்சியை உருவாகச் செய்வது அமெரிக்காவுக்கு கடினமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தரை படைகளை பயன்படுத்தாமல் ஈரானில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தும் டிரம்ப் அரசின் நோக்கம், தற்போதைய சூழ்நிலையில் எளிதானதாக இருக்காது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆகையால், மத்திய கிழக்கில் நிலவும் இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து உலக நாடுகள் கவலையுடன் கவனித்து வருகின்றன.

Tags: iran attacksayatollah ali khamenei deadiran attack uaeayatollah ali khamenei confirmed deadiran attackedsupreme leader ali khamenei deadiran attack dubaiayatollah ali khamenei deathiran uae attackiran attack on dubaius attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackus israel iran attackiran attackiran attacks us basesAYATOLLAH ALI KHAMENEIiran us bases attack
ShareTweetSendShare
Previous Post

ஈரான் போரில் சீனா மௌனம் காக்கும் ரகசியம் – அதிர வைக்கும் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Next Post

திருவாரூர் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் – விவசாயிகள் வேதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies