பிரதமர் மோடி தொடங்கி வைத்த மயிலாடுதுறை, காரைக்குடி விரைவு ரயிலுக்கு திருவாரூரில் மக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து காரைக்குடி செல்வதற்கான ரயில் சேவை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திருவாரூர் வழியாக மயிலாடுதுறை, காரைக்குடி இடையேயான புதிய விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் வந்தடைந்த ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினர், திருவாரூர் வர்த்தக சங்கத்தினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
















