தேனி மாவட்டம், அன்னஞ்சி விளக்கு பகுதியில் பராமரிப்பு பணிக்காக கோயிலை இடித்தபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அன்னஞ்சி விளக்கு பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலில் இருசமுதாய மக்கள் ஒன்றிணைந்து திருவிழாக்களை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் கோயிலை நிர்வாகிப்பது குறித்து இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. பராமரிப்பு பணி மேற்கொள்ள ஒருதரப்பினர் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று வந்து கோயிலை இடிக்கும் பணியை மேற்கொண்டபோது மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோயில் வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், இருதரப்பினடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினர் இடையே சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
















