விருதுநகரில் நகைக்காக மூதாட்டியை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்த தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் 62 வயது மூதாட்டியான அம்பிகா. கடந்த 8-ம் தேதி உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு செல்லும் வழியில், மூதாட்டி அம்பிகா காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் புலிக்குறிச்சி அருகேயுள்ள காட்டுப்பகுதியில், மூதாட்டி அம்பிகாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அப்பகுதி அருகேயிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, இரு பெண்கள் மூதாட்டியை அழைத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர் விசாரணையில் அவர்கள் எஸ்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த லோகாம்பாள் மற்றும் அவரது 17 வயது மகள் என்பது தெரியவந்தது.
மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் நகைக்காக அவர்கள் மூதாட்டியை ஏமாற்றி அழைத்துச் சென்று, கொலை செய்ததும் விசாரணையில் அம்பலமானது.
அதனடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















