தேனி அருகே திமுக நிர்வாகி தூண்டுதலின் பேரில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பகுதியில் ஸ்டீபன் என்பவருக்கும் சுதாகர் என்பவருக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுதாகர் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச ஸ்டீபன் தனது ஆதரவாளர்களை ஏவி ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.
இதில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இந்நிலையில் காவலர் ஞானசேகரன், சுதாகர் மற்றும் பிரபு ஆகிய மூவரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தேனி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி செயலாளர் ஸ்டீபன், விமல், சந்தோஷ், தனுஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
















