பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அதைச் சமாளிக்க அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
பொருளாதா நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் தற்போத ஈரான் – அமெரிக்க போரால் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பல கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
அரசு வாகனங்களை இயக்கக்கூடாது என அறிவித்த அவர், அரசு தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களையும் ரத்து செய்தார்.
அரசுத் துறை வாகனங்களுக்கான எரிபொருள் பயன்பாடு அடுத்த இரண்டு மாதங்களுக்கு 50% குறைக்கப்படும் என்றும் 60% அரசு வாகனங்கள் அடுத்த 2 மாதங்களுக்கு இயக்கப்படாது என்றும் அறிவித்தார்.
அடுத்த 2 வாரங்களுக்குப் பள்ளிகள் மூடப்படும் என்றும், அரசு அலுவலகங்கள் 4 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் பிரதமர் ஷெரீப் அறிவித்தார்.
அரசின் கட்டுப்பாடுகளைக் கிண்டல் செய்யும் விதமாக, “எல்லாவற்றையும் மூடிவிட்டீர்கள், அப்புறம் எப்படி வாழ்வது?” என்ற வாசகம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போதிய எரிவாயு இல்லாததால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அதற்குத் தீர்வாக அரசு சொல்லும் வினோதமான யோசனைகளையும் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் கேலி செய்து வருகின்றனர்.
















