நெல்லை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 580 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் மேற்கொண்ட பல்வேறு அதிரடிச் சோதனைகளில் கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் நாங்குநேரி அருகே உள்ள பொத்தையடி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் எரியூட்டு மையத்திற்குக் கொண்டுவரப்பட்ட 580 கிலோ கஞ்சா நெல்லை சரக டிஐஜி மற்றும் நெல்லை எஸ்.பி முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.
















