மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மத்திய கிழக்கில் உருவாகி வரும் நெருக்கடி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலையும் பொதுமக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பதற்றத்தைக் குறைத்து பேச்சுவார்த்தை நடத்துவதே ஒரே வழி என்றும், அனைத்து தரப்பினரும் விரோதப் போக்கை நிறுத்தி, சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்தி, பொதுமக்களைப் பாதுகாத்து, உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று குட்டெரெஸ் வலியுறுத்தி உள்ளார்.
















