திருப்பூர் அருகே குழந்தைகளை தெருநாய்கள் கடிக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகர் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடமாட முடியாத சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், விஜிவி கார்டன் குடியிருப்பு பகுதியில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தையை தெரு நாய் ஒன்று துரத்தி கடித்தது.
இதில், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தையை தெருநாய் துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















