ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அபாஸ் அரக்சி உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் வேகப்படுத்தி உள்ளன. போர் தொடங்கி 14 நாட்களை எட்டி உள்ளது. இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அரக்சியுடன் 4 ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பிராந்திய மற்றும் போரின் தாக்கம் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையில் நிறுத்தப்பட்டுள்ள 28 கப்பல்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அபாஸ் அரக்சியிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
















