சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்று பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.
கொளத்தூரை சேர்ந்த காஞ்சனா என்பவர் ஸ்கேன் எடுப்பதற்கு சென்றபோது தான் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் செல்போனை ஒரு பையில் வைத்து அதனை மருத்துவர் ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
அதை வாங்கிவிட்டு நீண்ட நேரம் அவர் காணமல்போனதால் சந்தேகமடைந்த பெண் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளிள் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜேஷ் பிரித்வி மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 12 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.
















