கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில், பிரபல ரவுடி கும்பல் தலைவனான அலுவா அதுல் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
காரில் சென்று கொண்டிருந்த அவர் மீது, மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
கார் பள்ளத்தில் விழுந்ததும், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
















