வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் பிரசாரக் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி மற்றும் வளர்மதி ஆகிய நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், தேர்தல் பிரச்சாரக் குழுவில் அதிமுக எம்பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தளவாய் சுந்தரம், தனபால் உள்ளிட்ட பத்து பேர் இடம்பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி, தேர்தல் தொடர்பான விளம்பரப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் விளம்பரக் குழுவும், சட்டப் பிரச்னைகளுக்கு தீர்வு காண சட்டக் குழுவும் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
















