தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பொதுமக்கள் பணம் கையில் எடுத்துச் செல்ல முடியும் என்றும் அதற்கு மேல் பணம் கொண்டு செல்வோர், உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருட்களோ கொடுப்பது, மற்றும் ஓட்டுக்களுக்கு விலை பேசுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி அரசு இயந்திரத்தையோ, வாகனங்களையோ, அதிகாரிகளையோ சொந்தப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















