மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த நிதிஷ்குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் 37 மாநிலங்களவை எம்.பி பதவியிடங்கள் அடுத்த மாதம் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கான தேர்தலில் தமிழகம், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 26 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதர 11 உறுப்பினர் பதவிகளுக்கு 14 பேர் போட்டியிட்டனர். அதில் பீகாரில் 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிதிஷ்குமார், பாஜக தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் இருவரும் தலா 44 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர். இதேபோன்று ராம்நாத் தாக்கூர், உபேந்திர குஷ்வாகா, ஷிவேஷ் ராம் ஆகியோர் 41 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர். 5 எம்.பி பதவிகளையும் பாஜகவினரே கைப்பற்றி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
















