கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் கந்த சஷ்டி கவசம் பாடல் அமைந்துள்ள கல்வெட்டை தேர்தலை முன்னிட்டு அறநிலையத்துறை காகிதம் மூலம் மறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி சார்ந்த கல்வெட்டுகள் மற்றும் தலைவர்களின் சிலைகள், துணி மற்றும் பேப்பர்கள் மூலம் மறைக்கப்படுகிறது. குறிஞ்சி ஆண்டவர் கோயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் கந்த சஷ்டி கவச பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
இதனை அறநிலையத்துறை காகிதம் மூலம் மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, கோயில் பொறுப்பாளர்கள், காகிதத்தை அகற்றினர்.
கந்த சஷ்டி கவசம் கல்வெட்டில் அரசியல் சார்ந்த எந்த ஒரு பெயரும் இல்லாத நிலையில், அதை ஏன் மூடினார்கள்? என இந்து முன்னணியினர் கேள்வி எழுப்பினர்.
















