ஈரான் போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடையே 20 நாட்களாக போர் நீடித்து வரும் நிலையில், கமேனியின் மரணத்திற்கு பழிவாங்குவோம் என புதிய உச்ச தலைவர் மொஜ்தபா சபதம் எடுத்துள்ளார்.
அமெரிக்க ஆதரவு நாடுகளை குறிவைத்து தாக்கிய ஈரான், தற்போது அமெரிக்காவுக்கே குறித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ராணுவ தளமான Fort McNair-ல் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் தங்கியுள்ள நிலையில்,
Fort McNair கட்டடத்தின் மீது மீது டிரோன்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கமேனி மற்றும் ஈரானிய அதிகாரிகளின் மரணத்திற்கு பழிவாங்க அமெரிக்க அதிகாரிகள் மீது ஈரான் குறிவைத்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
















