வன்முறை மற்றும் முறைகேடுகள் இல்லாத வெளிப்படையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதிபூண்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்த பல்வேறு அதிரடி கண்காணிப்பு நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.
தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் மொத்தம் ஆயிரத்து 111 மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலின் போது வன்முறை அல்லது வாக்காளர்களை அச்சுறுத்துவதை எக்காரணம் கொண்டும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
















