அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.
அயோத்தியில் வேத கணிதத்தின் அடிப்படையிலும், நேர்மறை ஆன்மீக ஆற்றலை உருவாக்கும் வகையிலும், பகவான் ராமரின் தெய்வீக இருப்பை உணர்த்தும் வகையிலும் யந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. 150 கிலோ எடையுள்ள, தங்க முலாம் பூசப்பட்ட இந்தச் சதுர வடிவ உலோகத் தகட்டில், வேத மந்திரங்களும் ‘பீஜ’ மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த யந்திரத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்தார். தொடர்ந்து ஆரத்தி காண்பித்து அவர் வழிபாடு மேற்கொண்டார்.
பின்னர் உரையாற்றிய அவர், ராமருக்கு சொர்க்கத்தை விட அயோத்தி தான் மிகவும் விருப்பமான இடம் என்றும், இந்தப் புனித மண்ணில் கால் வைத்தது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றும் கூறினார்.
ராம பக்தர்களுக்கு அட்வான்ஸ் ராம நவமி வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்
















