புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை, பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது தொகுதி பங்கீடு, லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணிக்குள் இணைப்பது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மன்சுக் மாண்டவியா, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்றும், பாஜக 10, அதிமுக 2, லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எந்த தொகுதிகள் என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
















