திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த கட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இரு தொகுதிகளை கேட்ட நிலையில், திமுக தங்களை புறக்கணித்து விட்டதாகவும் அவர் கூறினார். பெரியணன் பாணியில் திமுக செயல்படுகிறது எனறும் அவர் விமர்சித்தார்.
தாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை திமுக அரசு பொருட்படுத்தவில்ல என்றும் அவர் வேதனை தெரிவத்தார். தமிழகத்தில் அதிகாரிகள் ஆட்சி தான் நடைபெறுகிறது என்றும் அவர் சாடினார்.
















