சென்னையில் நடைபெற்ற நீதித்துறை தொடர்பான கருத்தரங்கில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பங்கேற்றார்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நீதிக்களம் 2026 என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு உள்ளிட்ட நீதித்துறையை சார்ந்த பலர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் பங்கேற்ற தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், தமிழில் வணக்கம் கூறி உரையை தொடங்கினார். இந்த கருத்தரங்கில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், நீதிபதிகள் பற்றாக்குறையால் பல்வேறு நீதிமன்றங்களில் ஐந்து கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.
















