புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் தவெக தனித்து களம்காணும் நிலையில் 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். லாஸ்பேட்டை தொகுதியில் சாமிநாதன், காரைக்கால் தெற்கு தொகுதியில் அசனா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக போட்டியிடும் உப்பளம் தொகுதியில் தவெக சார்பில் சிவா, உருளையன்பேட்டை தொகுதியில் மரிய பிரான்சிஸ் ஆகியோர் களம்காண்கின்றனர்.
















