Drowning Incidentராணிப்பேட்டை அருகே ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சிப்காட் அருகே உள்ள திருவிக நகரை சேர்ந்த பார்த்திபன், நித்திஷ் உட்பட 3 பேர் அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தனர்.
இவர்கள் மணியம்பட்டு பகுதியில், உள்ள ஏரியில் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது மாணவர் ஒருவர் ஆழமான பகுதியில் குளித்ததால், நீரில் மூழ்கினார்.
இதனை பார்த்த சக மாணவர்கள் இருவர், அவரை காப்பாற்ற முயன்றனர்.
இருப்பினும் அவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
















