முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓவைசி, மாநிலத்தில் சிறுபான்மையினரின் மேம்பாடு என்பது முக்கிய பிரச்னையாக உள்ளது என கூறினார்.
மேலும், மேற்குவங்க மக்கள் தேடிக்கொண்டிருக்கும் மாற்று வழிகளை வழங்குவதற்காக தனது கட்சி ஹுமாயூன் கபீரின் ஏஜேயுபி கட்சியுடன் கைகோர்த்துள்ளதாகவும் ஓவைசி தெரிவித்தார்.
















