பிஎன்ஜி கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர் 3 மாதங்களுக்குள் குழாய் இணைப்புகளுக்கு மாற வேண்டும் என மத்திய அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேற்காசிய பகுதியில் நீடிக்கும் போர் காரணமாக சமையல் எரிவாயு விநோயகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காணும் வகையில் எஸ்மா எனப்படும் அத்தியவாசிய சேவைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதில் பிஎன்ஜி கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர்கள் 3 மாதங்களுக்குள் குழாய் மூலம் எரியாவு கிடைக்கும் திட்டத்திற்கு மாற வேண்டும் எனவும்
அதனை மறுக்கும் நுகர்வோருக்கு வீட்டு சமையல் எரிவாயு விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், பிஎன்ஜி வசதிகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் எல்பிஜி சமையல் எரிவாயு தொடர்ந்து விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ள மத்திய அரசு
பிஎன்ஜி இணைப்புக்கான அனுமதியை மூன்று வேலை நாட்களுக்குள் அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும். ஒப்புதல் வழங்க தவறினால் ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாகவே கருதப்பட்டு 48 மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது
மேலும், பிஎன்ஜி இணைப்புக்கான அனுமதி கிடைத்ததில் இருந்து 4 மாதங்களுக்குள் குழாய் பதிக்கும் பணிகளை எரிவாயு விநியோகஸ்தர்கள் செய்து முடிக்க வேண்டும் எனவும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பிஎன்ஜி எரிவாயு குழாய் இணைப்புகளை பெற விரும்புவோர் எரிவாயு விநியோக நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசின் தொழில்துறை தெரிவித்துள்ளது.
அதில் பிஎன்ஜி இணைப்புகளை பெற ஆர்வமுள்ள வணிகர்கள் மற்றும் நுகர்வோர்கள் நகர எரிவாயு விநியோக நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும், எல்.பி.ஜி ஒதுக்கீடு பெறுவோர் அவர்களுக்கான எண்ணெய் நிறுவனங்களிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் பிஎன்ஜி இணைப்புகளை பெற விரும்புவோர் மாநில அளவிலான தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















