சென்னை திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் ராமநவமியை முன்னிட்டு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ராமபிரானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதி உலா மிக விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ராமபிரான் சீதாதேவி லட்சுமணர் எழுந்தருளினர்.
மேள தாளங்கள் முழங்க 4 மாட வீதிகளில் தேர் வீதி உலா வந்தபோது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
















