மதுரை மாவட்டம் சோழவந்தானில் புகழ்பெற்ற ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழர்களின் தொன்மையான மற்றும் தெய்வீகக் கலையாகப் போற்றப்படும் பரதநாட்டியம், தற்போது பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே அரங்கேற்றப்பட்டு வரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
ஒரு நாளைக்குச் சிறிது நேரம் பரதநாட்டியம் ஆடுவது உடலுக்குப் புத்துணர்ச்சியையும், மனதிற்கு அமைதியையும், உயிருக்கு ஒருவித உயிரோட்டத்தையும் தருகிறது என நடனக் கலைஞர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
















