திமுக எம்.பி ஜெகத்ரட்கனுக்கு சொந்தமான வாகனத்தில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 50 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சூளை பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி 50 லட்ச ரூபாய் பணம் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது,
இதனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மது ஆலைக்கு சொந்தமான கார் எனவும். அதில் இருந்த பணத்திற்கு எந்த ஆவணங்களும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை எழும்பூர் கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர்.
















