கோவையில் தனியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
கோவையில் உள்ள தனியார் பல்கலைக் கழக வளாகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற 94 மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.
தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 328 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய காமகோடி, 2035 இல் நாடு கல்வியில் சிறந்து விளங்கும் என தெரிவித்தார். மேலும் உள்நாட்டு தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.
















