தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இந்நிலையில், பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் அலுவலரிடம் அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
அதனை தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பெரம்பூர் தொகுதியிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொளத்தூர் தொகுதியிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
அதேபோல, மாலை 6 மணி முதல் 7 மணி வரை வில்லிவாக்கம் தொகுதியில் அவர் பரப்புரை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 2ம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
















