அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிராக, அக்கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கண்ணன் போட்டியிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலில் அறிவித்தார்.
இதனால், நேர்காணலுக்கு சென்று இம்முறை தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த மேற்கு ஒன்றியச் செயலாளர் தன.
சேகர் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு அமைச்சர் சிவசங்கர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோரே முழு காரணம் எனவும், இவர்கள் கட்சியை வளர்ப்பதை விட, அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை எனவும், பணபலம் உள்ளவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுப்பதாகவும் தெரிவித்தார்.
















