தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சேலம் மேற்குத் தொகுதியில் பாமக மாநில இணைப் பொதுச்செயலாளர் இரா.அருள் போட்டியிடுகிறார். வந்தவாசி தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் முரளி சங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கும்பகோணம் தொகுதியில் மாநில நிர்வாககுழு உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான ம.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். இதேபோல், விருத்தாசலம் தொகுதியில் மாவட்டச் செயலாளர் இ.கே.சுரேஷ் மற்றும் மயிலாடுதுறை தொகுதியில் மாவட்டச் செயலாளர் பாக்கம் சக்திவேல் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
















