கேரளம் மாநிலத்தில் வேட்பாளர் ஒருவர் வெறும் 84 ரூபாய் சொத்து மதிப்பு கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோட்டயத்தை சேர்ந்த 26 வயதான ஆஷ்னா என்பவர், “இந்திய சோசலிஸ்ட் ஒற்றுமை மையம்” என்ற கட்சியில் உள்ளார்.
இவர் எட்டுமானூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதில் அவரின் சொத்து மதிப்பு வெறும் 84 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. 40 ரூபாய் ரொக்கமாகவும் 44 ரூபாய் வங்கி கணக்கில் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
















