திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்தனர்.
தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த புனித நீரால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் விழாவில் திரளானோர் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
















