திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தருமபுரியில் என்டிஏ சார்பில் போட்டியிடும சௌமியா அன்புமணியை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதகாவும், கடன் வாங்குவதிலும், ஊழலிலும் தான் திமுக அரசு முதலிடம் பிடித்துள்ளதாகவும் அவர் சாடினார்.
அண்ணா பல்கலை. வழக்கில் அந்த சார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கண்டுபிடிக்கப்படுவார் என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.
















