பிரதமர் சென்னையில் ரோடு ஷோவில் பங்கேற்கவில்லை என பாஜக தலைமை செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி, சென்னை வழியாக இன்று புதுச்சேரி சென்று தேர்தல் பிரசாரம் செய்வதாக தெரிவித்தார்.
புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் பிரதமர், இரவு தங்கி நாளை கேரளம் செல்ல உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் சென்னையில் ரோடு ஷோவில் பங்கேற்க உள்ளதாக வெளியாகும் தகவல் தவறானது என்றும் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்தார்.
















