புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோட் ஷோ மேற்கொண்டார்.
அஜந்தா சிக்னல் சந்திப் பில் இருந்து காமராஜர் சாலை வரை 1.5 கி.மீ தூரத்திற்கு பேரணி வாகன பேரணி மேற்கொண்டார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
















