புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திருநள்ளாறு பாஜக வேட்பாளர் ராஜசேகரன், திருப்பட்டினம் நிரவி பாஜக வேட்பாளர் மீனாட்சி சுந்தரத்தை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக வேண்டாமென மக்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் புதுச்சேரி முழுமையான வளர்ச்சி பெற தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
















