யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
நிபந்தனை ஜாமீனை மீறி, நீதிமன்றத்தில் சரணடையாமல் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை தனிப்படை அமைத்து சென்னை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கரை சென்னை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
















