எரிபொருள் விநியோகத்தை சீராக்குவதற்கான வழிமுறைகள் குறித்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்காசிய பதற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எரிபொருள் வினியோகத்தை விரைவில் சீராக்குவதற்கான வழிமுறைகள் குறித்து குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தனித்தனியாக காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது எரிவாயு விநியோக சிக்கல்களை தீர்க்க இந்தியா முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாக அவர்களிடம் மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















