உலகம் எப்போதெல்லாம் நெருக்கடிகளில் சிக்குகிறதோ, அப்போதெல்லாம் அந்தத் துயரத்திலிருந்து உலகை மீட்டெடுக்கும் சக்தியாக இந்தியா உருவெடுக்கிறது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், உலகளாவிய மாற்றங்கள் மற்றும் கலாசாரத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் இந்தியா தனது அடையாளத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதாகவும் இந்த தளராத உறுதிக்கு நம்மிடம் உள்ள ஆன்மீக ஞானம்தான் காரணம் எனவும் குறிப்பிட்டார்.
















