ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடை - அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!
Oct 18, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடை – அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 15, 2026, 10:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகள் மற்றும் வரிகள் குறித்து ‘பிரிக்ஸ்’ கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக விமர்சித்தார்.

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அவர், போர், காலநிலை மாற்ற பாதிப்புகள் மற்றும் கொரோனா பெருந்தொற்றின் பின்விளைவுகளால் உலகளாவிய அளவில் தற்போது பெரும் அழுத்தம் உள்ளதாக குறிப்பிட்டார்.

இத்தகைய சவால்கள் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிப்பதோடு, பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச அமைப்புகளையும் சிரமத்திற்கு உள்ளாக்குவதாக கூறினார். இதற்கிடையே சர்வதேச சட்டம் மற்றும் ஐநா சாசனத்திற்கு முரணான, ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய போர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர், பிராந்திய அளவில் நடக்கும் போரின் தாக்கம் அவற்றின் எல்லைகளைத் தாண்டி, எரிசக்தி விநியோகம், உணவு மற்றும் உர பாதுகாப்பு, பணவீக்கம் ஆகியவற்றில் பெரும் அழுத்தத்தை உருவாக்குவதாக கூறினார்.

குறிப்பாக மேற்காசியாவில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, கடல்சார் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். உலகப் பொருளாதாரத்திற்கு ஹோர்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் போன்ற முக்கிய வழிகளில் தடையற்ற போக்குவரத்து நடப்பது அவசியம் என்றும் தெளிவுபடுத்தினார்.

Tags: External Affairs Minister JaishankarBRICS Foreign Ministers' MeetingBRICS meetingRussian crude oil import
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் பிரச்சாரத்துக்கு போன போது, சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று  பேசியிருக்கலாமே? – உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி!

Next Post

ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எங்கிருந்து நிதி வந்தது – பாஜக கேள்வி!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies