அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக்கோரி ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக 4 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.